கட்டு கட்டாக வீசப்பட்ட பணம் - போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்

 
bஇ

கட்டு கட்டாக பணக்கட்டுகள் வீசப்பட்டிருந்ததால் பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றார்கள்.  இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானது அல்ல; ஒரிஜினல் ஆகும்.  இது தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

னொ

 பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் ரோக்தாஸ் மாவட்டத்தின் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவு நீர் கால்வாயில் 2000 ரூபாய், 500 ரூபாய், 100 ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் மிதந்துள்ளன. 

 இதை பார்த்த கிராம மக்கள் முதலில் இவை போலி ரூபாய் நோட்டுகளாக இருக்கலாம் என்று நினைத்து கால்வாய்க்குள் இறங்காமல் இருந்திருக்கிறார்கள்.  சிலர் கால்வாய்க்குள் இறங்கி ரூபாய் நோட்டுகள் எடுத்திருக்கிறார்கள்.  அது ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்ததும் அருவருப்பு பார்க்காமல் கால்வாயில் இறங்கி பணத்தை எடுத்திருக்கிறார்கள்.


கால்வாயில் பணக்கட்டுகள் மிதக்கும் தகவல் கிராமம் முழுவதும் பரவி இருக்கிறது.  கிராம மக்கள் திரண்டு வந்து கழிவு நீரையும் பொருட்படுத்தாமல் கால்வாய்க்குள் இறங்கி பண நோட்டுகளை அள்ளி சென்று இருக்கிறார்கள்.  இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்துமே போலியானது அல்ல உண்மையானது என்று மக்கள் கூறி அள்ளிச் சென்றுள்ளார்கள். 

 இதுகுறித்து சிலர் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பரப்ப , தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கால்வாயில் கிடந்த ரூபாய் நோட்டுகள் உண்மைதானா என்பது என்று விசாரணை நடத்தினர் .  கால்வாயில் கிடந்த அந்த நோட்டுகள்  உண்மைதான் என்று தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் கால்வாயில் வீசியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.