கேரளாவில் தீவிரமடைந்த பருவமழை : வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு..

 
கேரளாவில் தீவிரமடைந்த பருவமழை : வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு..

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு கனமழை பாதிப்புகளால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக  பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  இதனால் காட்டாற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.  மழையால் சில வீடுகளும் இடிந்துள்ளன. மழை பாதிப்பிற்கு  கேரளாவில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்து விட்டனர்.

கேரளாவில் தீவிரமடைந்த பருவமழை : வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு..

இந்நிலையில் கோட்டையம் மாவட்டம் முந்தகையம் என்கிற ஊரில் பணிக்கு சென்ற தோட்டத்து தொழிலாளர்கள்,  காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.  தகவலறிந்து சென்ற உள்ளூர் பொதுமக்கள் உடனடியாக கயிறு கட்டி 17 பேரையும் பத்திரமாக  மீட்டனர். இதனிடையே கனமழையின் காரணமாக திருவனந்தபுரம்,  கொல்லம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  அத்துடன் இடுக்கி , கண்ணூர் மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு  மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.  47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் தற்போது பருவமழை வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தீவிரமடைந்த பருவமழை : வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு..

இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள  மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு,  அதிகாரிகள் விழிப்புடன்  இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையை  எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இடுக்கி,  எர்ணாகுளம், கண்ணூர்,கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இடுக்கியில்  இரவு நேர பயணத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.  மழையின் தீவிரத்தை  கருத்தில் கொண்டு கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.