மழைக்கால கூட்டத்தொடர் : 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்..

 
Parliament Parliament

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை  அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வருகிற ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்க உள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்ற பெருமையை இது பெறுகிறது. ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை இந்த  கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 21 மசோதாக்களை அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டு உள்ளதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Central Govt

அந்தவகையில் டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பான அவசர சட்டம்,  டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா,  வன பாதுகாப்பு திருத்த மசோதா  உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. இவற்றை தவிர தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, ஜன விஸ்வாஸ் (திருத்தம்) மசோதா, கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக  மக்களவை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.