சபரிமலையில் மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்
சபரிமலையில் மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் மேற்கொண்டனர்.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள். மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை தினமும் சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய காரணத்தினால் 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரக் கூடிய பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நிறைவடைவதை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளனர்.மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளது இதுவே முதல்முறை. நவ.16ல் நடை திறக்கப்பட்ட நிலையில் நேற்று வரை சுமார் 26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் என தகவல் தெரிவித்துள்ளது.


