சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் - ம.பி. முதலமைச்சர் காலை கழுவி மரியாதை

 
MP CM

மத்தியபிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் தொடரான வீடியோ வைரலாகி சர்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த இளைஞரின் காலை கழுவி அம்மாநில முதலமைச்சர் மரியாதை செய்தார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தேஷ்பத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர் மீது சிறுநீர் கழித்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தேஷ்பத் மீது சிறுநீர் கழித்த நபர் அதே பகுதியை பர்வேஷ் சுக்லா என்பதும் இவர் பாஜக நிர்வாகி என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில், போலீசார் அவர் இருப்பிடம் அறிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரின் இந்த செயலுக்காக அவரது வீட்டின் ஒரு பகுதியை புல்டோசரை கொண்டு இடித்து தள்ளினர். 


இந்த நிலையில், பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த் இளைஞரை தனது இல்லத்திற்கு அழைத்த அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  இளைஞரின் காலை கழுவி  மரியாதை செய்தார். மேலும் பாஜக நிர்வாகி இவ்வாறு நடந்துகொண்ட செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கோரினார் சிவராஜ் சிங் சவுகான். முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாதிக்கப்பட்ட இளைஞரின் காலை கழுவிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.