மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 12 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்.. ’அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது’ என சாடல்..

 
மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 12 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்.. ’அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது’ என சாடல்..  மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 12 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்.. ’அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது’ என சாடல்.. 


2006ம் ஆண்டு  ஜூலை 11ம் தேதி மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.  

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி  மும்பை புறநகர் ரயில் வழித்தடங்களில் , அடுத்தடுத்து 7 ரயில்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் 180 உயிரிழந்தனர்.  பலர் காயமடைந்தனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதில்  5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.  இந்த தீர்ப்புக்கு பிறகு மகாராஷ்டிரா அரசு,  மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி  மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறை செய்திருந்தது. 

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 12 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்.. ’அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது’ என சாடல்.. 

 அதேபோல் குற்றவாளிகளும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர். அதன்பிறகு நாள்தோறும் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், இன்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 குற்றவாளிகளும்  வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  

அப்போது  மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைகளையும் ரத்து செய்தது.  அப்போது குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் அனில் கிசலோர் மற்றும் ஷியாம் சந்தக் அமர்வு குறிப்பிட்டது.  அவர்கள் தான் குற்றம் செய்தார்கல் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது என்றும் கூறி  அவர்களது தண்டனையையும் ரத்து செய்வதாக கூறினர்.