வீட்டு வரி செலுத்தாததால் கதவுகளை கழற்றி சென்ற நகராட்சி அதிகாரிகள்!

 
s

வீட்டு வரி செலுத்தாததற்காக நகராட்சி அதிகாரிகள் வீட்டில் இருந்த கதவுகளை கழற்றி எடுத்து சென்றது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானா மாநிலம்  பூபாலபள்ளி மாவட்டம் பெத்தகுண்டப்பள்ளி தாண்டா கிராமத்தை  சேர்ந்த ஹுனாநாயக் பூபாலபள்ளி நகராட்சி பகுதியில்  குடிபெயர்ந்து ஆடு மேய்த்துக்கொண்டே ஒரு சிறிய வீட்டைக் கட்டி குடும்பம் நடத்தி வருகிறார். அந்த வீட்டிற்கு உண்டான  வீட்டு வரியாக ரூ.20,000 கட்ட வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லாததால்  ரூ.5,500 கட்டினார். மீதமுள்ள பணத்தை 15 நாட்களுக்குப் பிறகு  செலுத்துவதாக கூறினார். 

அதற்குள் நகராட்சி அதிகாரிகள் ஹுனாநாயக் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த கதவுகளை கழற்றி கொண்டு சென்றனர். வீட்டின் கதவுகள் கொடுக்கப்படாவிட்டால் முழு குடும்பமும் தற்கொலை செய்து கொள்வோம் என நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.