கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி காலமானார்!

 
tn

கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்திய கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி காலமானார்.

tn

கேரளாவில் அக்ஷர லக்ஷம் திட்டத்தின்படி 96 வயதில் கார்த்தியாயினி என்ற மூதாட்டி கல்வி கற்று தேர்வை எழுதினார்.  இத்தேர்வில் நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.  இதைத்தொடர்ந்து கார்த்தியாயினி மூதாட்டி கணினி இயக்க ஆர்வம் காட்டிய நிலையில் அவருக்கு மடிக்கணினி பரிசாக வழங்கப்பட்டது.  அத்துடன் அவர் காமன்வெல்த் அமைப்பு கல்விக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

tnt

இந்நிலையில் முதியோர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கேரள எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும், ‘அக்ஷரா லக்ஷம்' திட்டத்தில் கல்வி கற்ற மிகவும் வயதானவர் என்ற பெருமையை பெற்ற மூதாட்டி கார்த்தியாயினி (101) வயது மூப்பால் காலமானார்.இவர் 2018ல் நடந்த தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.