ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து
போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது ரத்து செய்யப்பட்டது.
டோலிவுட் நடன இயக்குனர் ஷேக் ஜானிபாஷா என்கிற ஜானி மாஸ்டர் தன்னிடம் பணி புரிந்து வந்த உதவி பெண் நடன இயக்குனர் மைனராக இருந்தது முதல் தொடர்ந்து பாலியியல் பலாத்காரம் செய்ததாக 21 வயதான பெண் உதவி நடன இயக்குனர் முதலில் ராய்துர்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரின் குடியிருப்பு நரசிங்கி பகுதியில் இருப்பதால் பின்னர் நரசிங்கி காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் புகாரின்படி, அவர் முதலில் ஜானி மாஸ்டரை 2017 இல் சந்தித்ததாகவும், 2019 இல் உதவி நடன இயக்குனராக அவரது குழுவில் சேர்ந்தார்.
மும்பையில் ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது, ஜானி ஒரு ஓட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனை யாரிடமாவது சொன்னால் திரையுல கனவு வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் ஐதராபாத் மற்றும் பிற நகரங்களில் பல வெளியூர் படப்பிடிப்புகளை நடன இயக்குனர் ஜானி அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து பாலியில் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜானி மாஸ்டர் கோவாவில் இருப்பதை அறிந்த தெலங்கானா மாநில சைபராபாத் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.