பிரசவத்தின் போது காட்டன் துணி பண்டல் வயிற்றுக்குள் வைத்து தைத்த அலட்சியம்

 
i

பிரசவத்திற்கு பின்னர் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால்  ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் காட்டன் துணி பண்டல் இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த துணி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கிறது.  கடந்த இரண்டு வருடங்களாக அந்த பெண் அவதிப்பட்டு வந்திருக்கிறார் .

தெலுங்கானா மாநிலத்தில் ஜெகத்தியா பகுதியில் உள்ள அரசு தாய் நல மருத்துவமனையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் நவ்யஸ்ரீ என்கிற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அறுவை சிகிச்சை  செய்த அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்து இருக்கிறது   

c

பின்னர் அந்த பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.  ஆனால் அடிக்கடி வயிற்று வலியால் அந்த பெண் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.  இப்படி 18 மாதங்கள் அந்த பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.  

 மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் பஞ்சு துணி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது .   மீண்டும் அந்தப் பெண் சிகிச்சைக்காக தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   அங்கு நடந்த அறுவை சிகிச்சையில் தான் வயித்துக்குள் இருந்த காட்டன் துணி பண்டல் அகற்றப்பட்டு இருக்கிறது. இதன் பின்னர் அப்பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.   இந்த புகாரின் பேரில் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.