2020ல் சாலை விபத்துகளில் 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு..- மத்திய அரசு தகவல்

 
புதுக்கோட்டையில் விபத்து; 10 பேர் பரிதாப பலி


கடந்த ஆண்டு நாடு முழுவதும் .உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 48,000 பேர் உயிரிழந்துள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8 வழி சாலை அராஜகம்!  ஆம்புலன்ஸ் போகவும் வழி இல்லை!

நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி , சாலை விபத்துகள் மற்றும் அதற்கான காராணங்கள்  குறித்த பட்டியலை வெளியிட்டார். அதில் விபத்துக்கான காரணங்களாக வாகனங்களின் வடிவமைப்பு, மாது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது,  சாலை அமைக்கப்பட்ட விதம், அதி வேகமாக வாகனத்தை இயக்கியது, தவறான  வழித்தடத்தில் வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட காரணங்கள் இடம்பெற்றுள்ளன.

நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து : 9 பேர் பலி !

2019 ஆம் ஆண்டு .தேசிய நெடுஞ்சாலைகள் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53 ஆயிரத்து 872 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், 2020 ம்  ஆண்டு 48 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.  விபத்துக்களை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புகளை மேம்படுத்தவும் பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் செய்து நெறிமுறைகள் வழங்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி கூறினார்.