2024 தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள திட்டம் - நிதிஷ் குமார் ..

 
2024 தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள திட்டம் - நிதிஷ் குமார் ..

2024 நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது!. 

பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 4 மணிநேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, " மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்" என்றார். அவரைத்தொடர்ந்து,  தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாடு குறித்து விமர்சித்தார்.

2024 தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள திட்டம் - நிதிஷ் குமார் ..

அதேபோல ஆம் ஆத்மி தரப்பில், டெல்லி சேவைகள் மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. இப்படியான காரசார விவாதங்களுக்கு இடையே பேசிய சரத்பவார்,  மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும், நாங்களும் (தேசியவாத காங்கிரஸ்) 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள்; இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.  மேலும் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதிஷ்குமார், "இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.