ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!!

 
reserve bank

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

tn
வங்கிகளில் கடந்த மே மாதத்தில் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக இருந்தது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம்  5.4% ஆக இருந்தது. பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் 6.25 சதவீதமாக உயர்ந்தது. கடந்த 2022ம் ஆண்டு  மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 2.20 சதவீதம் வரை என 5 முறை உயர்த்தியது.  இந்த நிலையில் 6வது  முறையாக கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், தனிநபர் வட்டி,  வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டது.   

tn
இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடர்கிறது;  நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக ரிசர்வ் வங்கியின் ரிப்போர்ட் விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கிய ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். உலகத்தின் வளர்ச்சியில் என்ஜினாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்