புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை யாரும் அழைக்கவில்லை- அதிர்ச்சி தகவல்

 
Parliament

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

பழைய நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை  குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக  கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்தை தொடர்ந்து கடந்த மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி அதனை திறந்து வைத்தார். அந்த நாடாளுமன்றத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. 

draupadi murmu


 
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.  புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு குடியரசு தலைவர் மாளிகை பதில் அளித்துள்ளது.