இந்தியாவிடம் பணிந்த பிரிட்டன்: தடுப்பூசி விவகாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது!!

 
vaccine

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்லை என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

ttn

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவிஷீல்டு, கோவாக்சின்  ஆகிய தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஆக இருக்கும் போதிலும்,  இந்தியர்கள் பிரிட்டனுக்கு வரும் பட்சத்தில் அவர்கள் 10 தனிமைப் படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா பதிலடியாக , இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளும் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவித்தது.

vaccine

இந்நிலையில் இந்தியாவின் இந்த அதிரடியான அறிவிப்பைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு இந்தியாவிடம் பணிந்து உள்ளது . அதாவது இந்தியாவின் தடுப்பூசி முறைக்கு அக்டோபர் 11-ம் தேதி முதல் அங்கீகாரம் அளிக்கிறோம் என்றும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் 2 டோஸ் கோவிஷீல்டு  அல்லது வேறு எந்த தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனுக்கு வரும் இந்தியர்களுக்கு இது சிறப்பான செய்தியாக அமையும் என்றும் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்த இந்திய அரசுக்கு நன்றி என்றும் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எலிஸ் கூறியுள்ளார்.