பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் உயிரிழப்பு! கதறும் உறவினர்கள்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பசுவின் பால் மூலம் ரேபிஸ் தொற்று அப்பெண்ணுக்கும் ஏற்பட்டு, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில் நாட்களுக்கு முன் தெரு நாய் ஒன்று கடித்ததால் ஏற்கனவே அந்தப் பசுவுக்கு ரேபிஸ் இருந்துள்ளது. இந்நிலையில் பசுவின் பாலை கொதிக்க வைக்காமல் அப்படியே குடித்த சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு அறிகுறிகள் தோன்றின. உடனே அப்பெண்ணை காப்பாற்றும் தீவிர முயற்சியில், குடும்ப உறுப்பினர்கள் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்தப் பசு ஒரு கன்றுக்குட்டியைப் பெற்றெடுத்தது. அதன் பாலை அப்பசுவின் குடும்பத்தினரும், மற்ற கிராம மக்களும் தொடர்ந்து உட்கொண்டுள்ளனர். ரேபிஸ் தொற்று அப்பசுவுக்கு அடையாளம் காணப்பட்டவுடன், கிராமத்தைச் சேர்ந்த பத்து பேர் ரேபிஸ் தொற்றுக்குப் பிந்தைய தடுப்பூசிகளை நாடியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.