பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள்.. வாய் திறக்காத பிரதமர் மோடி - பூபேஷ் பாகல் விமர்சனம்..

 
Bhupesh Baghel


பாஜக ஆளும் வட கிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் விமர்சித்துள்ளார்..

மே10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  தலைநகர் பெங்களூருவில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  நேற்று சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு பேரணி நடத்திய பிரதமர் மோடி,  என்று 10  கிலோமீட்டர் தொலைவு வரை திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.  அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மோடி மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோன்று பலகாவி தொகுதி பகுதியில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா  பரப்புயில் ஈடுபட்டார்.

modi

இதனிடைய பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்,  கர்நாடகா தேர்தலில் பிஸியாக பரப்பரை செய்யும் மோடி பாஜக ஆளும் வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறை குறித்து வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, “ பிரதமர் பிசியாக கர்நாடக தேர்தல் பரப்பறையில் ஈடுபட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகிறது. ஆனால் அது பற்றி பிரதமர் மோடி வாய் திறப்பதில்லை. கர்நாடக மக்களின் நலனுக்காக என்ன செய்வார்கள் என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை. அவர்கள் வெறும் பரப்புரை செய்து வாக்கு கேட்கிறார்கள்” என்று தெரிவித்தார்.