நான் மனிதப்பிறவி அல்ல - பிரதமர் மோடி

 
modi modi

நான் ஒரு பணியை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்டவன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 

Modi

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இதுவரை 5 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை ஒட்டி தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகிறார்.



இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பேசும் போது, என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்  என்று தெரிவித்துள்ளார்.