பிரபல கலை இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய் தற்கொலை!!

 
tt

பிரபல கலை இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் கலை இயக்குனர் நிதின் சந்திரகாந்த் தேசாய்.  இவர் ஹம்தில் தே சுக்கே சனம்,  லகான், தேவ்தாஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களுக்கு ஆடம்பரமான செட்களை வடிவமைப்பது வெற்றி கண்டவர்.  தனது 20 வருடசினிமா  வாழ்க்கையில், அசுதோஷ் கோவாரிகர், விது வினோத் சோப்ரா, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி போன்ற இயக்குனர்களுடன் நிதின் பணியாற்றியுள்ளார். 

tn

2002 இல், அவர் சந்திரகாந்த் புரொடக்ஷன்ஸின் தேஷ் தேவி, கட்ச்சின் தேவி மாதா பற்றிய பக்தித் திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக மாறினார்.  2005 ஆம் ஆண்டில், மும்பைக்கு அருகிலுள்ள கர்ஜாத் என்ற இடத்தில் 52 ஏக்கர் பரப்பளவில் தனது ND ஸ்டுடியோவைத் திறந்தார்.  இங்கு  ஜோதா அக்பர், டிராஃபிக் சிக்னல் மற்றும்  பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளும் படமாக்கப்பட்டு வந்தன.

tn

இந்நிலையில் நிதின் சந்திரகாந்த் தேசாய்  கலபூர் ராய்கரில் உள்ள அவரது என்டி ஸ்டுடியோவில் தூக்கிட்டு கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிதின் தேசாய் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி அவரது 58 வது பிறந்தநாள் கொண்டப்படவுள்ள நிலையில் இவரது மரணம் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.