டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை தொடக்கம்
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.எஸ்.ஜி மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

டெல்லி போலீஸ் கமிஷனரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இந்த வெடி விபத்து சம்பந்தமான விஷயங்களை கேட்டறிந்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு டெல்லி செங்கோட்டை வெடி விபத்தில் தீவிரவாத சம்பவம் அல்லது தீவிரவாத காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்திருக்கிறார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. இதில் அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. தகவலறிந்தவுடன் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கார் வெடித்துச் சிதறியதில் மேலும் சில வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக டெல்லி தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். செங்கோட்டை பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் எட்டு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


