விநாயகர் சிலை முன் ஆபாச நடனம்- 7 பேர் கைது
திருப்பதியில் விநாயகர் மண்டபத்தில் ஆபாச நடனம் ஆடிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி சப்தகிரி நகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை மண்டபம் வைத்து வழிப்பாடு செய்யப்பட்டது. இதில் விநாயகர் சிலை முன் இளம்பெண் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து ஆபாச நடனம் ஆடினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி பெண்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சாமி வழிப்பாடு செய்யும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் பக்திக்கு பதில் தங்களின் மகிழ்ச்சிக்காக என்று கூறி கொண்டு மது அருந்தியும், இதுபோன்ற ஆபாச நடனம் ஆடுவது வழக்கமாக வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அலிபிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.
விநாயக சதுர்த்தி விழாக்களில் இதுபோன்ற ஆபாச நடனங்களுக்கு இடமில்லை என்றும், விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி மாவட்ட எஸ்.பி. சுப்பராயடு எச்சரித்தார். கேளிக்கை என்ற பெயரில், மரபு மீறி செயல்படுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மகளிர் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.