பொறுத்தது போதும் என ஆவேசம்! மாஜிஸ்திரேட் மீது செருப்பு வீசிய கைதி

 
ச்

அதுவரைக்கும் பொறுமையாக இருந்த அந்த கைதி பொறுத்தது போதும் என்று ஆவேசம் அடைந்து மாஜிஸ்திரேட் ரேட் மீது செருப்பை கழற்றி எறிந்தார்.  இதனால் நீதிமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது .

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் மான்கூர்டு  பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் சேக் . 39 வயதான இந்த வாலிபர் மீது என். எம். ஜோசி,  டிராம்பே போலீசில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.   இந்த வழக்குகளின்  விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை அன்று குர்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் ஜாஹித் சேக்.

க்

 ஒரு மணி நேரம் வரைக்கும் காத்திருந்த போதும் வழக்கு விசாரணை தொடங்காமல் இருந்திருக்கிறது.  இதில் அந்த கைதி ஆத்திரமடைந்திருக்கிறார்.  திடீரென்று எழுந்து சத்தம் போட்டு தன் காலில் கிடந்த நெருப்பை கழற்றி மாஜிஸ்திரேட் மீது வீசி எறிந்து இருக்கிறார் .  இதனால் நீதிமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. 

 பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜாவித்தை கைது செய்தனர்.  குர்லா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அரசு ஊழியரை தாக்குதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சம்பவம் குறித்து  காவல்துறை தரப்பில் ஜாவித் சேக் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கி முடிக்குமாறு அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் நீதிமன்றத்திற்கு மீண்டும் மீண்டும் வந்து விசாரணை நடக்காததால் அதிருப்தியில் இருந்து இருக்கிறார் .  இதனால் பொறுமை இழந்து இப்படி ஒரு செயலை செய்து இருக்கிறார்.  செருப்பை வீசி இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.