இந்தியாவில் 422 ஆக அதிகரித்துள்ள ஒமைக்ரான் பாதிப்பு....

 
Omicron

இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்,   இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரானால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

 அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  டெல்லியில் 79  பேருக்கும்,  குஜராத்தில் 43 பேருக்கும்,  தெலங்கானாவில் 41பேருக்கும், கேரளாவில் 38 பேருக்கும் , கர்நாடகாவில் 31 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மேற்குவங்கத்தில் 6 பேரும், ஹரியானா, ஒடிசா, ஆந்திராவில் தலா 4 பேரும், ஜம்மு -காஷ்மீரில் 3 பேரும் , உத்தரப்பிரதேசத்தில் 2 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான்

 இதேபோல் மஹாராஷ்டிராவில்  23 பேர், குஜராத்தில், 10 பேர், தமிழகத்தில் 12 பேர், தெலங்கானாவில் 10 பேரும் எஅன ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கடந்த மாதம்  தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் இதுவரை 106 நாடுகளுக்கு பரவியுள்ளது.

ஒமைக்ரான் கொரோனா

மேலும் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க ஜனவரி 3ம் தேதி முதல் 15-18 வயதுள்ள சிறுவர்களுக்கும்,  முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.