வயநாட்டை தொடர்ந்து ஆந்திராவை உலுக்கிய திடீர் நிலச்சரிவு! அச்சத்தில் மக்கள்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறை விழுந்து ஒருவர் வலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவில் தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு வாரமாக கடும் வெள்ளத்தில் மூழ்கியது. மலைப்பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பு சுண்ணாம்பு வண்டி சந்திப்பு மலையில் ஏற்பட்ட மண் சரிவில் நான்கு பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால், மலைப்பகுதி முழுவதும் ஈரமாகி, மலை உச்சியில் இருந்து நிலச்சரிவுகள் ஏற்படுகிறது. இன்று மாச்சவரம் பகுதியில் உள்ள மாடர்ன் பல்பொருள் அங்காடியை அடுத்த குடா வெங்கடசுவாமி தெருவில் நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர் ( கார்மிக ) நகரைச் சேர்ந்த ராமு (55) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்ததுடன் மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
பெரிய பாறைகள் ஒரேயடியாக விழுந்ததால் அங்கு என்ன நடந்தது என்பதை சுதாரித்து கொள்வதற்குள் இந்த சம்பவம் நடந்ததாக அப்போது மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த அப்பகுதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது, மாநகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் போலீஸார் தீவிர பாறைகளுக்கு அடியில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா என மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.