நம் பெண்களின் குங்குமத்தை அழித்ததற்கு பதிலடியே ‘ஆபரேஷன் சிந்தூர்’ - மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்..!
இந்திய பெண்களில் குங்குமம் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே ஆபரேஷ சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர், சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் பதில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்த 9 பயங்கரவாத உட்கட்டமைப்பு இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருந்தது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் 4 நாட்களில் இருநாடுகளில் போர் நிறுத்த முடிவுக்கு உடன்பட்டனர். அதேநேரம் அமெரிக்காவி தலையீட்டால் தான் இந்த போர் சூழல் முடிவுக்கு வந்ததாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாகி எதிர்க்காட்சிகள் விவாதத்தை தொடங்கிய நிலையில், ராணுவ மாட்டத்திலான பேச்சுவார்த்தையிலேயெ போர் முடிவுக்கு வந்ததாகவும், மூன்றாவதாக ஒரு நாட்டின் தலையீடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.

இருப்பினும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் இதனை மிக முக்கிய பிரச்சனையாக எதிர்கட்சிகள் கையாண்டன. மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதன்படி பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்ம்ப் மத்தியஸ்தம் செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று பிற்பகல் 12 மணியளவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் விளக்கமளிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மக்களவையில் அவர் பேசியதாவது, “இந்த விவாதத்திற்கு முழு ஒத்துழைப்பு தர மத்திய அரசு தயாராக உள்ளது. நாட்டுகாக அவர் தியாகம் செய்த தைரியம் நிறைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்துள்ளது. இந்தியாவின் நவீன ஏவுகணைகளை பய்ன்படுத்தி தாக்குதல் நடத்தினோம். இந்திய பெண்களின் சிந்தூர் (குங்குமம்) அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாத இடங்களை மட்டுமே நாங்கள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை.

இந்திய வீரர்களின் வீரத்திற்கும் திறமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அப்போது இந்திய படைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. ஆனால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது. இது எந்த அழுத்ததிற்கும் அடிபணியாத ஒரு தற்காப்பு நடவடிக்கை ஆகும். பயங்காவாதிகளை வளர்த்தெடுக்கும் இடங்கள் மட்டுமே நமது இலக்காக இருந்தது; நமது இலக்கு 100% எட்டப்பட்டுவிட்டது. முதலில் போரை நிறுத்த பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது” என்று தெரிவித்தார்.


