மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் - அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்திய எதிர்கட்சிகளின் எம்.பிக்கள் குழு..

 
மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் - அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்திய எதிர்கட்சிகளின் எம்.பிக்கள் குழு..

மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குழு, அம்மாநில ஆளுநர் அனுஷ்யா உக்கியை சந்தித்துப் பேசினர்..   

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ந்தேதி பேரணி நடத்தினர். அந்த பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, மணிப்பூர் மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தால்160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட 50,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Manipur Violence

இதனிடையே குக்கி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது, அங்கு பெண்கள் மற்றும் குக்கி பழங்குடியினருக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனையடுத்து  மணிப்பூர் உண்மை நிலைமையை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ளது.  

மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் - அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்திய எதிர்கட்சிகளின் எம்.பிக்கள் குழு..

ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகள் என்கிற அடிப்படையில் 22 பேர் அடங்கிய எம்.பிக்கள் குழு விமானம் மூலம் மணிப்பூர் சென்றுள்ளனர்.  இந்தக்குழு நேற்று முதல் மணிப்பூர் பள்ளத்தாக்கு, மலைப்பகுதிகள் , நிவாரண முகாம்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து  மணிப்பூர் ஆளுனர் அனுஷ்யா உக்கியை சந்தித்த எம்.பிக்கள் குழு, மணிப்பூரில் அமைதி திரும்புவது அவசியம் , உடனடியாக அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் என ஆளுனரிடம் வலியுறுத்தியுள்ளது.