நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!

 
Parliament


பட்ஜெட்டுக்கு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து  எதிர்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.   

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட  2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா  உள்பட   மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  குற்றிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும்  பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காத ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ என எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. 

  நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!

 மத்திய பட்ஜெட்டை எதிர்த்து இன்று ( ஜூலை 24) காலை 10.30 மணியளவில்   நாடாளுமன்ற வளாகத்தில்  இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி,  மற்றும் காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இந்தியா கூட்டணி எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இந்த  போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கின. 
அப்போதும், இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டி,  பட்ஜெட்டை கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.   மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த அனுமதி வழங்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.