நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை

 
opposition

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் வருகிற ஆகஸ்ட் மாதம்  11 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் பற்றி ஆலோசிப்பதோடு,  கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ள நிலையில் அனைத்தையும் விவாதிக்க தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், எதிக்கட்சி உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, சிபிஐ, ம.தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், சரத்பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.