கேராளவிற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்.. மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை..

 
கேராளவிற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்.. மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை..  கேராளவிற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்.. மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை.. 


கேரளாவிற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட  பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், கேரள மக்கள், குழந்தைகள் என 3069 பேர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

கேராளவிற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்.. மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை.. 

இந்நிலையில் கேரளாவில் தொடந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சவாலாகியுள்ளது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில்  இன்று 5 மாவட்டங்களில்  மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

அதேநேரம் தொடர்ந்து கனமழை பெய்துவருவதன் காரணமாக மண்ணில் அதிக ஈரத்தன்மை இருப்பதானால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கூடுதல் பாதுகாப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.