கர்நாடகாவில் 6000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம்! ஆதாரத்துடன் ராகுல்காந்தி அம்பலம்

 
அ அ

கர்நாடக மாநிலத்தில் அலந்த் தொகுதியில் 6000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும்போது யாரோ வாக்காளர்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்குத்திருட்டு குறித்து டெல்லியில் மீண்டும் ஆதாரங்களை வெளியிட்ட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்கு திருட்டு தொடர்பாக பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும், 
தற்போது தான் 100% ஆதாரத்தை கண்டறிந்துள்ளோம். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாப்பதற்காகவே இதனை நான் செய்கிறேன். லட்சக்கணக்கானோரை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம், வாக்கு திருட்டு மூலம் இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. வாக்கு திருட்டை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் மறைக்கிறார். வெளிமாநில செல்போன் எண்களை பயன்படுத்தி கர்நாடகாவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.


கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தேர்தலை திருட யாரோ சிலர் மையப்படுத்தப்பட்ட கிரிமினல் நடைமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். வெடிகுண்டை நான் இன்னும் வெளியிடவில்லை, இனிமேல்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது” என்றார்.