உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல்

 
P chidambaram

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (79).  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. 2004-ல் ஏ.கே.ஆண்டனி  முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வராக பதவியேற்றார் உம்மன் சாண்டி. 2006 முதல் 2011-வரை எதிர்க்கட்சி தலைவராகவும் , 2011-ல் மீண்டும் முதல்வராகவும் பொறுப்பு வகித்தார்.   இந்நிலையில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமுறை கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பள்ளி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவர் பருவத்திலிருந்தே உம்மன் சாண்டி தீவிர காங்கிரஸ் பற்றாளர்.கேரளாவில் மதச்சார்பின்மை, சமூகநீதி, சகோதரத்துவம் கொள்கையை வெளிப்படுத்தியவர் உம்மன் சாண்டி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.