எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!
May 8, 2025, 14:41 IST1746695466100
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே
நள்ளிரவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே
நள்ளிரவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. குப்வாரா, பாரமுல்லா, உரி உள்ளிட்ட பகுதிகளில்
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய
நிலையில் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து எல்லையோர பகுதிகளில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.


