இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தடை

 
flights flights

இந்தியாவின் எந்த விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

First PIA flight to European Union leaves for Paris after 4-year ban lifted  | World News - Hindustan Times


தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்.  பாகிஸ்தானுக்கு எதிராக  இந்தியா தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் எந்த விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்குள் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவுடனான அனைத்து வகையிலான வர்த்தகத்திற்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.