இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

 
Parliament

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் இன்று துவங்குகிறது.

draupadi murmu

ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் .அந்த வகையில் நாட்டின் 15 வது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத்துடன் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் 2023- 24 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கும் நிலையில்   குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றுகிறார்.

nirmala

இதன் பின்னர் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வு அறிக்கையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 2022 -23 ஆம் ஆண்டின் வளர்ச்சி நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்ட  தகவல்கள் இதில்  இடம் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி ஆவணப்படம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடரின் முதல் இரண்டு தினங்கள் பூஜை நேரம் மற்றும் கேள்வி நேரம் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இன்று முதல் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை பட்ஜெட்  கூட்டத்தொடர்  நடைபெற உள்ள நிலையில் இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற உள்ளது