பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

 
Parliament

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபட்டது

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் உ.பா.சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Parliament Attack

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபட்டது. பாதுகாப்பு குறைபாடு குறித்து உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.