ஐதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டு விபத்து

 
Train

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நாம்பள்ளி ரயில் நிலையத்திற்கு சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வந்தது. ரயில் நிலையத்திற்கு 5 வது பிளாட்பாரமில் ரயில் இறுதியாக நிற்கும் இடம் என்பதால் மிகவும் மேதுவாக இயக்கப்பட்டு வந்த நிலையில் திடிரென ரயில் இஞ்சின் நேரடியாக சென்று எதிரில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதனால் ரயிலில் இருந்த 5 பெட்டிகள் தடம் புரண்டது. அந்த நேரத்தில்  பயணிகள் ரயில்  மேதுவாக செல்வதால் இறங்க முயன்றவர்களில் 50 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. 

உடனடியாக  ரயில்வே துறை ஊழியர்கள், போலீசார் உடனடியாக அங்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நடைமேடை பக்கவாட்டு சுவர் மோதியது குறித்து விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   காயமடைந்த 50 பயணிகள் லாலாகூடாவில் உள்ள ரயில்வே  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  நம்பள்ளி ரயில் நிலையத்தில் நடந்த விபத்து காரணமாக, மீதமுள்ள ரயில்கள் தாமதமாக செல்கின்றன. பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும்  இறங்கி விட்டதாக தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.   

தண்டவாளத்திற்கு  சற்று பக்கவாட்டில் ரயில் பெட்டிகள் சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  ஹைதராபாத் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பொன்னம் பிரபாகர், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை உஷார்படுத்தி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். காயமடைந்த பயணிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.