“சனாதன வாரியம் அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது”- துணை முதல்வர் ட்வீட்டால் பரபரப்பு

 
பவன் கல்யாண் பவன் கல்யாண்

சனாதன வாரியம் அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீவிபத்தில் சிக்கினார்


ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், "உலகளாவிய இந்து சமூகத்திற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு புனித யாத்திரை மையமாகும்.  அது ஒரு புனிதமான ஆன்மீக ஸ்தலம். திருப்பதி லட்டு வெறும் இனிப்பு மட்டுமல்ல அது ஒரு  உணர்ச்சி பூர்வமானது. அதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பக்தியுடன்   விநியோகிக்கிறோம். ஏனெனில் அது அனைவரது கூட்டு நம்பிக்கையையும் ஆழ்ந்த நம்பிக்கையையும் உள்ளடக்கியது. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். சனாதனர்களின் உணர்வுகள் மற்றும் நடைமுறைகள் கேலி செய்யப்படும்போது அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும்போது, ​​அது வெறும் புண்படுத்தும் விஷயமல்ல. அது உலகெங்கிலும் உள்ள லட்சகணக்கான மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் சிதைக்கிறது. மதச்சார்பின்மை இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கைக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதையை பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க முடியாது. நமது சனாதன தர்மம் பழமையான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் நாகரிகங்களில் ஒன்றாகும், மேலும் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை நிறுவ வேண்டிய நேரம் இது. அனைத்து  ஒருமித்த கருத்துடன் செயல்படுத்த வேண்டும்" என பதிவு செய்துள்ளார்.