ஜனசேனா சட்டமன்ற குழுத் தலைவராக பவன் கல்யாண் தேர்வு
Jun 11, 2024, 11:03 IST1718084025383
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு.

தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் காரணமாக பவன் கல்யாண் துணை முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



