வெறுங்காலுடன் இருந்த மலை கிராம மக்களுக்கு செருப்பு வழங்கிய பவன் கல்யாண்
Apr 20, 2025, 10:30 IST1745125224772
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சுற்றுப்பயணம் செய்த கிராமத்திற்கு செருப்புகளை அனுப்பி வைத்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த மார்ச் 7 ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த மாவட்டத்தில் உள்ள பெடபாடு மலைக்கிராமத்திற்கு சென்றபோது அங்குள்ள பழங்குடியின மக்கள் வெறுங்காலுடன் இருந்ததை கண்டார். அவர் திரும்பி வந்து பிறகு பெடபாடு கிராமத்தில் வசிக்கும் 345 பேருக்கும் அதிகாரிகளிடம் கூறி தனது சொந்த செலவில் செருப்புகளை வாங்கி அனுப்பினார். இந்த செருப்புகளை அணிந்து கொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு எளிய மனிதாபிமான செயல் ஒரு முழு கிராமத்திற்கும் கண்ணியத்தையும், ஆறுதலையும், பரந்த புன்னகையையும் கொண்டு வந்துள்ளது.


