"காங்கிரஸை நம்ப மக்கள் தயாராக இல்லை" - நிர்மலா சீதாராமன் பேட்டி

 
ttn

காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

tn

கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையை பொருத்தவரை பாஜக,  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவு வருகிறது.

ttn

பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு  படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பெங்களூரு, ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , வாக்கு என்பது மக்களின் அதிகாரம்.  எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்து வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் இதற்கு முன்பு கொடுத்த எல்லா இலவச திட்டங்களையும் நிறைவேற்றி இருந்தால் மக்கள் அவர்களை நம்பி இருப்பார்கள். ஆனால் இதுவரை அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சியை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றார்.