ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி.. அரசு சார்பில் இறுதி மரியாதை.. !!

 
ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி.. அரசு சார்பில் இறுதி மரியாதை.. !!


மறைந்த தொழிலதிபர் டாடாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக மும்பை NCPA வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்தியாவின் பிரபலமான மற்றும் இந்தியத் தொழில்துறையில் தவிர்க்க முடியாத முக்கிய தொழிலதிபராக இருந்தவர்  ரத்தன் டாடா.  இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக விளங்கிய ரத்தன் டாடா,  உடல்நலக்குறைவு காரணமாக முப்பையில் காலமானார். அவருக்கு வயது 86.  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா, நேற்றிரவு  சிகிச்சை பலனின்றி காலமானார்.  இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி.. அரசு சார்பில் இறுதி மரியாதை.. !!

இதனிடையே ரத்தன் டாடாவின் மறைவையொட்டி இன்று ( அக்.10) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும்,  அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.  இதனையொட்டி அவரது உடல் மும்பை நரிமன் பகுதியிலுள்ள தேசிய கலை மையத்தில்  (NCPA)பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை அவரது உடல் அங்கு வைக்கப்படும் நிலையில் , பின்னர் வோர்லி மையானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லபடுகிறது.  அங்கு அரசு சார்பில் ரத்தன் டாடாவி  உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.  இந்த இறுதிச்சடங்கில் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.