புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி!!

 
ttn

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

புத்தாண்டு என்றாலே அதைக் கொண்டாடாதவர்கள் யாரேனும் உண்டோ? கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஆடிப்பாடி புத்தாண்டு கொண்டாடுவது என்பது சில ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை  கருத்தில் கொண்டு வருகிற ஜனவரி 31 மற்றும் 1ஆம் தேதிகளில் கடற்கரையில் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல இளைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் புதுச்சேரி அரசு தற்போது அறிவித்துள்ள அறிவிப்பு பலருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது எனலாம்.

ttn

இந்நிலையில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ், புத்தாண்டு   பண்டிகையை கொண்டாட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது . அந்த வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக டிசம்பர் 24, 25-ம் தேதிகளிலும்,   புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 30 ,31 , ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் இரவு நேர பொது முடக்கத்தில்  தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு அன்று மக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்த சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது. ஓட்டல்களில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது .புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு திட்டமிட்டுள்ள ஓட்டல்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்து விட்டு, ஒரு நகலை சுற்றுலாத்துறையில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து அனுமதி விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

டிசம்பர் 31ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் ,கடற்கரைக்குச் எப்படி செல்ல வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கோபுரம், மின் விளக்கு அலங்காரங்கள், கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்காத  வகையில் தடுப்பு கட்டைகள் அமைத்தல், கடற்கரையில் நீச்சல் தெரிந்த நபர்களை பணியாற்றுவது போன்ற நடவடிக்கைகள் தற்போது புதுச்சேரி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்தாண்டு புதுச்சேரியில் புத்தாண்டு களைகட்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.