"அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரான் கொரோனா": பிரபல மருந்து நிறுவனங்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!!

 
corona


கொரோனா வைரஸ் வரிசையில் டெல்டாவுக்கு அடுத்ததாக ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாக கூற இயலாது என பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசல் மற்றும் பயான்டெக் தெரிவித்துள்ளன.

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஆனது ஹாங்காங், போஸ்ட்வானா,  இஸ்ரேல் நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்தகொரோனா  வைரஸ் மற்ற வைரஸ்களை காட்டிலும் மிக வேகமாக பரவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  இந்த வகை வைரஸ் தடுப்பூசி அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை.  

corona virus

இந்நிலையில் ஒமைக்ரான் என்ற உருமாறியகொரோனாவை  தடுக்க தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் பயன் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்நிலையில் பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் பயான்டெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்கள் தடுப்பூசி மருந்து குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளன.  ஒமைக்ரான் அதிவேகமாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் ஆக உள்ளது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில்  தற்போதுள்ள தடுப்பு மருந்துகள் அதை தடுக்குமா என்ற விவரம் நான்கு வார ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உருமாறிய கொரோனாவுக்கு எதிராக 100 நாட்களில் தடுப்பு மருந்தை கண்டறிந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிவியல் இதழ் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இந்நிறுவனங்கள் இவ்வாறு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona

இதனிடையே உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுக்கும் விதமாக தென்னாப்பிரிக்கா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வரும்  விமானங்களுக்கு பிரிட்டன் நேற்றுமுன்தினம் முதல் தடை விதித்தது. அதேபோல் ஜெர்மனி, நெதர்லாந்து , இலங்கை , இஸ்ரேல் ஆகிய நாடுகளும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.