கட்டுப்பாட்டை இழந்த விமானம் - முன்கூட்டியே எச்சரித்த விமானி

 
அ அ

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல புறப்பட்ட உடனேயே விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் செல்லும் பயணிகள் விமானம் இன்று மதியம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். கிளம்பியதும் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் பயணம் செய்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உட்பட பலரும்  உயிரிழந்து உள்ளனர். விபத்தில் சிக்கிய 133 பேரின் உடல்மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல புறப்பட்ட உடனேயே விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்ததும் அபாயத்தை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டுள்ளார். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து 1.38 மணிக்கு  MAY DAY எனப்படும் அபாயத்தை தெரிவிக்கும் சிக்னலை விமானி அனுப்பியுள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பதில் வருவதற்கு முன்னரே ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துள்ளது.  முழு அளவில் எரிபொருள் இருந்த காரணத்தினால் தான் கீழே விழுந்ததும் பயங்கரமாக விமானம் வெடித்து சிதறியுள்ளது. விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் லண்டன் செல்ல வேண்டியது என்பதால் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது.