புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

 
modi modi

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ரங்கசாமிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது தொண்டர்கள் ரங்கசாமியின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்பட கதாப்பாத்திரங்களுடன் ரங்கசாமியை ஒப்பிட்டு அவருக்கு கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைத்து அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரின் பல்வேறு பகுதிகளிலும் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். பெரிதும் மதிக்கப்படக்கூடிய தலைவராக விளங்கும் ரங்கசாமி நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.