ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

 
Modi and murmu

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திரௌபதி முர்மு 1958 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார்.  மே 2015 முதல் 12 ஜூலை 2021 வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக இருந்தார். 2022இல் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு திரௌபதி முர்முவுக்கு தேசிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிற்கான கலங்கரை விளக்கம் ஆக இருப்பதுடன், நம்முடைய மக்களின் நலன்களுக்காக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.  தேசத்தின் வளர்ச்சியை இன்னும் மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிக்காக அவர் பாராட்டப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஓர் உந்துதலாக இருக்கும். அவருடைய உடல்நலம் மற்றும் ஒரு நீண்ட வாழ்வுக்காக வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.