சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

 
modi

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்பது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறிவைத்து ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  ஒருபக்கம் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். துணை ராணுவப்படை அறிவித்துள்ளது.  ஆயுதப்படைகள் இடையே நடந்து வரும் கடும் துப்பாக்கி சண்டையால் தினமும் ஏராலமானோர் உயிரிழந்து வருகின்றனர். மோதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், சூடான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மோதல் போக்கு நீடித்து வரும் சூடானில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.