செஸ் வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஃபிடே கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற்று வந்தது. எட்டு வீரர்கள் மற்றும் எட்டு வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். தலா இரண்டு முறை தங்களுக்குள் மோத வேண்டும். அத்துடன் ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் மோதும் வாய்ப்பை பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் 13வது சுற்றுகளின் முடிவில் முகேஷ் 8.5 புள்ளிகள் உடன் முன்னிலையில் இருந்தார். நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தனர். இந்த சூழலில் கடைசி சுற்றான 14வது ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகமுராவை கருப்பு நிற காய்களுடன் சந்தித்தார். இந்த ஆட்டத்தின் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய இக்கட்டான சூழலில் வீரர்கள் இருவரும் போட்டியை சந்தித்தனர். ஆனால் இப்போட்டியில் குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார் . இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார். மறுபுறம் நெபோம்நியாச்சி - பேபியானோ காருனா இடையிலான ஆட்டமும் டிரா ஆனதால் முகேஷ் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டார். இதன் மூலம் போட்டியின் முடிவில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் வென்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய வீரர் முகேஷ். உலக சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள இருக்கிறார்.
India is exceptionally proud of @DGukesh on becoming the youngest-ever player to win the #FIDECandidates!
— Narendra Modi (@narendramodi) April 22, 2024
Gukesh's remarkable achievement at the Candidates in Toronto showcases his extraordinary talent and dedication.
His outstanding performance and journey to the top… pic.twitter.com/pfNhhRj7W2
இந்நிலையில் பிரதமர் மோடி தனது சமூகவலைத்தள பக்கத்தில், "குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது; கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது; குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.