இந்த நன்னாள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஆழப்படுத்தட்டும் - பிரதமர் மோடி ஈஸ்டர் வாழ்த்து

 
modi

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று இயேசு உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை , திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. நள்ளிரவு முதலே தேவாலயங்களில் குவிந்த மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வழிபட்டனர்.  ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர். இதேபோல் தலைவர்களும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், பிரதமர் மோடி ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஆழப்படுத்தட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நினைவில் கொள்வோம். இவ்வாறு கூறியுள்ளார்.