நாளந்தா பல்கலை.யின் புதிய வளாகத்தை திறந்துவைத்தார் மோடி

 
tt tt

பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் உள்ள நாளந்தா பல்கலை.யில் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

 நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்திற்கு அருகே புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. நாளந்தா பல்கலை.யில் உள்ள பழங்கால இடிபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

tt

இதுதொடர்பாக  பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள். நாளந்தா பல்கலைக்கழகம் நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.